follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

Published on

காஸா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

“.. காஸா எல்லைக்கு வந்து, காஸா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காஸா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் டன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது.”

“மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீட்டிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...