“சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில்”

1212

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பரீட்சை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பரீட்சை திணைக்களம் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை தவறு எனக் கருதி நிராகரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் தூக்கி எறியப்பட்டதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தாமதத்திற்கு காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் பல நெருக்கடிகள் உருவாகி உள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து இவ்விடயங்களை சுட்டிக்காட்டியும் அதிகாரிகளிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here