அதிகமாக குழந்தைகளை பிரசவியுங்கள் – வடகொரிய ஜனாதிபதி

1178

அண்மைய சந்திப்பில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குறைந்து வரும் சிசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பங்களிக்குமாறு வடகொரிய பெண்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரிய ஜனாதிபதி அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் (Pyongyang) கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த போது ஆயிரக்கணக்கான வடகொரிய பெண்கள் கதறி அழுதனர். ஆனால் இது வெறும் நாடகம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடகொரியாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதும், நல்ல குழந்தைப் பருவ வளர்ச்சியை குழந்தைகளுக்கு வழங்குவதும் தலைவராக தனது கடமை என்று கிம் ஜாங் உன் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here