காஸா போருக்கு மத்தியில் புடின் இன்று மத்திய கிழக்கிற்கு

670

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு இந்த நாட்களில் நடத்தப்பட்டாலும், ரஷ்ய ஜனாதிபதி அத்தகைய நிகழ்வில் பங்கேற்பாரா அல்லது அவரது மத்திய கிழக்கு பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.

உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தினார்.

மேலும், போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால் ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய ஜனாதிபதி சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு மற்றும் காஸா போர் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here