யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் செலுத்தத் தவறிய கடனை மக்கள் வங்கிக்கு மீள வழங்க உத்தரவு

223

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் செலுத்தத் தவறிய கடனை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 120 மில்லியன் ரூபா குறுகிய கால கடன் வசதிக்கான தொகையை மீட்பதற்காக, வங்கி மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றில் எண். 90/99(1), வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி வழக்கிற்கு உயர்நீதிமன்றம் சமீபத்தில் மக்கள் வங்கிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 4ம் திகதி நிராகரித்துள்ளது.

அதன் பிரகாரம் கடன் வசதி தொடர்பில் செலுத்த வேண்டிய தொகையை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் வங்கி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ஏ. பார்த்தலிங்கம் அவர்களுடன் ஜனாதிபதியின் சட்டத்தரணி குஷான் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஹிரான் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here