பாடசாலை வேனில் மாணவி சாரதியால் துஷ்பிரயோகம்

1966

எம்பிலிப்பிட்டிய பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாடசாலை வேனில் வைத்து துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வேன் சாரதியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பனாமுரே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தனது சிறிய தாயின் பராமரிப்பில் இருந்த சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த மாணவி பாடசாலைக்கு வராமல் பாடசாலை சீருடையில் எம்பிலிப்பிட்டியவில் இருப்பதை அவரது தோழி ஒருவர் அவதானித்து பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் ஆனது குறித்த மாணவியின் வீட்டுக்கு அறிவித்ததையடுத்து, வீட்டார் இது குறித்து எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வேன் சாரதியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் பொலிசார் விடுவித்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

தான் புத்தகம் வாங்குவதற்காக கடையொன்றிற்கு சென்ற பின்னர், வேனில் சந்திரிகா ஏரிக்கு அருகே அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

தற்போது வேன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here