சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கியில் இருந்து பிடியாணை

374

சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கி சர்வதேச கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

சோமாலிய ஜனாதிபதியின் மகன் கார் விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோமாலிய பிடியாணை மகன் துருக்கியில் உள்ள ஸ்தான்புல் நகரில் காரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சோமாலிய துணைத் தூதரகத்துக்குச் சொந்தமான கார் ஒன்றே அவ்வாறு ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கி பயணத் தடை விதித்த போதிலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் சோமாலிய ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமட்டின் மகன் மொஹமட் ஹசன் ஷேக் மொஹமட் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here