காஸாவில் பசி அதிகரித்து வருகிறது

602

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர், பத்தில் ஒன்பது பேருக்கு தினசரி உணவு கூட கிடைக்காத நிலை காணப்படுவதாகக் கூறுகிறார்.

காஸா பகுதிக்கு தேவையான உணவு உதவிகளில் பாதி கூட அதை சென்றடைவதில்லை எனவும், அதற்கு உணவு அனுப்பவே முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் 17,700 பேர் இறந்துள்ளனர், அங்கு வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பினால் பிணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here