follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுமே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மூன்று வீர்கள்

மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மூன்று வீர்கள்

Published on

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை 2023-24 பருவகாலத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதில் ஆடவர் அணியின் 14 வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

குறித்த இந்த ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் விலகியுள்ள போதும், இவர்கள் அடுத்த ஆண்டுக்கான T20 போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் புதிய வீரர்கள் சிலருக்கும் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடகெஷ் மோடிஸ், கீஷி கார்டி, டெக்நரைஷ் சந்ரபோல் மற்றும் அலைக் அதனைஷ் ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் அணியின் முன்னணி வீரர்களான கிரைக் பிராத்வைட், ஷேய் ஹோப், ரோவ்மன் பவெல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற ஆகியோரும் வருடாந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தத்தை பெற்றுள்ள மே.தீவுகள் வீரர்கள்

அலைக் அதனைஷ், கிரைக் பிராத்வைட், கீஷி கார்டி, டெக்நரைன் சந்ரபோல், ஜோசுவா டி சில்வா, ஷேய் ஹோப், ஆகில் ஹொஷைன், அல்ஷாரி ஜோசப், பிரெண்டன் கிங், குடகெஷ் மோடிஸ், ரோவ்மன் பவெல், கெமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெபர்ட்

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...