புதிய மாற்றத்துடன் ‘மஹரகம’

422

வேகமாக நகரமயமாகி வரும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவில், நகர அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி ஹோகந்தர நகர அபிவிருத்திக்காக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றியமைத்து அபிவிருத்தியை துரிதப்படுத்த விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தக சமூகத்தினருக்கு இடையூறு இன்றி அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மஹரகம பமுனுவ பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாற்று வழிகளில் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மஹரகம மாநகர சபையில் கொட்டாவை கல்விக் கல்லூரி ஒன்றை நிறுவி மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதாகக் கூறிய பிரதமர், அபிவிருத்தி செய்யப்பட்ட நீச்சல் விளையாட்டு மைதானத்தை மஹரகம நகரசபைக்கு மாற்றுவது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டார்.

மஹரகம டிப்போவினால் தற்போது பயன்படுத்தப்படும் சுமார் ஆறு ஏக்கர் காணியை மிகவும் பயனுள்ள மற்றும் உகந்த வகையில் பயன்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான திட்டமிடல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here