விமலுக்கு நோட்டீஸ் – நோய் நிலைமை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க கோரிக்கை

511

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பிணையாளர்களை நாளை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்பித்த ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இன்று (12) பிறப்பிக்கப்படவிருந்தது.

அப்போது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த போது, ​​தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை 9 மணியளவில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

விமல் வீரவங்சவின் உத்தரவாததாரர்கள் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விமல் வீரவன்ச அமைச்சராகப் பணியாற்றிய போது, தனது சொத்துக்கள் மற்றும் வருமானத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here