ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 260 முதல் 280 ரூபா வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில்லரை விலை 450 ரூபாயாக மாறியுள்ளதாக நுகர்வோர் முறைப்பாட்டில் தெரிவிக்கின்றனர்.
லங்கா சதொசவில் நேற்று (11) ஒரு கிலோ பெரிய வெங்காயம் 365 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அரச நிறுவனம் எவ்வாறு இவ்வாறு விலையை அதிகரிப்பது எனவும் நுகர்வோர் மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.