பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் விடுதலை

776

தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டு அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் கைது செய்யப்பட்டார்.

அஹ்னாப் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக நிரூ­பிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்­லது அரச தரப்பு நீதி­மன்றம் முன்­னி­லையில் கொண்­டு­ வந்த சாட்­சி­யா­ளர்­கள் புத்­தளம் மேல் நீதி­மன்றின் தீர்ப்பின் ஊடாக அடிப்படையற்றதென தெரியவந்துள்ளது.

புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் இந்த வழங்கு விசா­ரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதி­மன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்­தே­க ­ந­ப­ரில்லை என நீதி­மன்றில் அறி­வித்­தி­ருந்தார்.

இந்நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here