அரச ஊழியர்களை நான் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தியதில்லை

247

தான் ஒருபோதும்,தனக்குக் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை தனது மனைவியின் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களாகப் பயன்படுத்தியதில்லை என்று பொறுப்புடன் கூறுவதாகவும், இந்த வகையில் அழுத்தத்தின் பேரிலயே பொய் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகவும், போலியான கணக்காய்வு அறிக்கைகளை தயாரித்து நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் இன்றி பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் உள்ளக கணக்காய்வை மேற்கொண்டுள்ளதாகவும், மொட்டுக் கட்சியின் தொழிற்சங்கத்தினால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் மற்றும் அவருடைய தகமைகள் என்பன பிரச்சினைக்குரிய விடயம் என்றும், சட்ட திட்டங்களை மீறி அவரை அரசியல் கருவியாக பயன்படுத்தியுள்ளனர் என்றும், இது குறித்த தேவையான அனைத்து ஆவணங்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதிபதி ஜினதாசவின் அறிக்கை கோப் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனை ஹன்சாட் பதிவிட முடியும் என்றும், அங்கீகாரம் பெற வேண்டிய சபைகளில் அங்கீகாரம் பெறப்பட்டு, நடந்து கொண்ட விதம் எவ்வாறு என்பது இதில் தெளிவாக புலப்படுவதால் இதனை உடனடியாக சபைக்கு சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here