வரவு செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பிற்கு 123 எம்பிக்களே ஆதரவு?

616

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மறுநாள் முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை நடைபெற்றது.

பின்னர் நவம்பர் 22ஆம் திகதி ஆரம்பமான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பிற்பகல் வரை இடம்பெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பின் கடைசி நாளான இன்று, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் பல வரவு செலவுத் தலைப்புகள் விவாதிக்கப்படவுள்ளன.

நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பிற்பகல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. அதற்கு பின்னர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9ம் திகதி மீண்டும் பாராளுமன்றம் ஒன்று கூடவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here