follow the truth

follow the truth

October, 9, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபாடசாலை சீருடை அணிந்து நீலப்படம் தயாரித்த பட்டதாரி தம்பதி கைது

பாடசாலை சீருடை அணிந்து நீலப்படம் தயாரித்த பட்டதாரி தம்பதி கைது

Published on

பாடசாலை மாணவிகள் போல் வேடமணிந்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பட்டதாரிகள் என்பது விசேடமாகும்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​ஆபாச வீடியோக்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதற்காக பயன்படுத்திய பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் பிற பொருட்களையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வியாபாரத்தினை சில காலமாக மேற்கொண்டு வரும் சந்தேகநபரால் முன்னெடுக்கப்படும் இணைய கணக்கில் சுமார் 4,400 பயனாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் வீடியோக்கள் சுமார் 8.7 மில்லியன் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தம்பதியொருவர் ஆபாசமான காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்ததாக கடுகன்னாவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணரத்ன அவர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாசுதேவவின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. தேசியப்...

சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார்...

“ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்களுடன் கூட்டணி கிடையாது” – ரிஷாத்

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள்...