இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
முதல்தர கிரிக்கட் போட்டிகளை நடாத்துவதற்கான புதிய திட்டங்கள், பாடசாலை கிரிக்கட் மற்றும் விளையாட்டுக் கழக போட்டித் தொடரில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கட் வர்ணனையாளர் திரு.ரொஷான் அபேசிங்க, சர்வதேச அனுபவமுள்ள முன்னாள் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டின் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை சாதகமான நிலையாகும்.