இலங்கைக்கு வர அனுமதி கோரும் மற்றுமொரு சீனக்கப்பல்

381

எதிர்வரும் ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இந்த நாட்டிற்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

”Xiang Yang Hong 03” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்பட உள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கத்திடமும் மாலைதீவு அரசாங்கத்திடமும் சீன அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இந்திய அரசாங்கம், குறித்த கப்பலுக்கு கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான ‘Xi Yang 06’ கூட கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை வந்தடைந்ததுடன், இந்திய அரசாங்கமும் இது தொடர்பில் கவலை தெரிவித்திருந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here