‘முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும்’

562

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ஒன்றரை கோடி முட்டைகளுடனான கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்தது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய் என்ற விலையில் விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுகர்வோர் தமக்கு தேவையான அளவு முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்வதற்கு போதுமான முட்டைகள் இல்லை என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here