“உபுல் தரங்கவின் கனவு 9,991 ஓட்டங்களுடன் நிறைவானது”

986

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவருமான உபுல் தரங்க சவால்களை ஏற்கக்கூடிய ஒரு வீரர் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. தெரிவுக் குழுவிற்கு தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உண்மையிலேயே எனக்கு சிரிப்பு வருகின்றது. உபுல் தரங்க முதல் தரத்தில் 10000 ஓட்டங்களை பெற்றதில்லை. 10,000 ஓட்டங்களைப் பெற்று ஓய்வினை அறிவிக்க அவருக்கு உண்மையிலேயே ஆசை இருந்தது. இம்முறை அதனை பூர்த்தி செய்ய உபுல் முயற்சித்தார். 9,991 உடன் நிறைவுக்கு வந்தது. நாம் இந்த பதவிகளை எடுத்ததை தொடர்ந்தும் அவரும் ஓய்வினை அறிவித்தார் அத்துடன் அவை முடிவுக்கு வந்தது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எல்லாவற்றையும் ஆராய்ந்து பதவிகளை வழங்கியிருக்க வேண்டும்.

நாம் உபுல் தரங்கவை அமைதியான வீரராகவே கண்டிருக்கிறோம். அப்படிப்பட்டவருக்கு இவ்வாறானதொரு பதவியை வழங்கி திட்டுக்களை வாங்கவா கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கக் கூடும். ஆனால் அவர் சவால்களை ஏற்க விருப்பமுடையவர். இந்தப் பதவியிலும் அவர் சவால் ஒன்றினை ஏற்றுள்ளார். அது குறித்து நான் மிகவும் சந்தோசமடைகிறேன்.

உபுல் தரங்கவிற்கு தெரிவுக் குழுவில் ஏனைய நான்கு நபர்களுடனும் சேர்ந்து சிறந்த பயணம் ஒன்றினை முன்னெடுக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன்.. அந்த நான்கு பெரும் சிறந்த வீரர்கள் உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்பில் நன்கு அறிந்தவர்கள். உள்நாட்டு வீரர்களுக்கும் தெரிந்தவர்கள். தற்போதுள்ள கிரிக்கெட் இனை அறிந்தவர்கள். இந்த சிஸ்டத்தில் 30 வருடங்களாக இருந்தவர். நான் தவறவிட்ட வீரர்கள் அவர்களுக்கு தவறியதில்லை. நூற்றுக்கு நூறு வீதம் நான் நம்புகிறேன்.

உபுல் தரங்க இந்தப் பதவியை ஏற்றதால் பண ரீதியாக நிறையவே நட்டம் ஏற்படுகிறது. அவர் ஒரு சிறந்த வீரர் என்பதால் ஏனைய லீக் களில் அவருக்கு அழைப்பு வருகிறது. இப்போது அவற்றில் பங்கேற்க முடியாது. அவர் இவற்றை எல்லாவற்றையும் ஒதுக்கியே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here