மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த விஞ்ஞான ஆசிரியர் கைது

2232

நுவரெலியா மாவட்டத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிதுல்லே பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியரும் ஆசிரியரே என்றும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வாட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று (21) வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன மற்றும் வலப்பனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுர பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here