பிரபலம நடிகர் Vin Diesel இற்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

342

‘ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்’ திரைப்படத் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகர் Vin Diesel இற்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு உறுதுணையாக இருந்த ஜொனாசன் என்ற யுவதியே இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 2010 ஆம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சில மணிநேரங்களில் பணிநீக்கம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vin Diesel ‘பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்’ திரைப்படத் தொடரின் ஐந்தாவது படத்தைப் படமாக்கிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஜொனாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here