இலங்கையை ஒடுக்கும் நாடுகள் குறித்து ரஷ்யாவின் நிலைப்பாடு

459

இந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ரஷ்யா ஒருபோதும் விமர்சிக்கவோ அல்லது தலையிடவோ போவதில்லை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகார்யன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கை தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தொடர முடியும்.

“.. பாதுகாப்பு விவகாரங்களில் ஜனாதிபதி புட்டினின் தலைமை ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவ் தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பலருடன் மிகவும் நன்றாக கலந்துரையாடினார். சில நாடுகளால் இலங்கை அழுத்தத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்..”

கேள்வி – இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

“.. உங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை நான் எப்போதும் தவிர்க்கிறேன். உங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் விமர்சிக்கவோ அல்லது தலையிடவோ இல்லை. நான் ஒரு அமெரிக்க தூதரோ அல்லது பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரோ அல்லது மேற்கத்திய தூதர்களோ அல்ல.”

கேள்வி – இலங்கையில் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படும் அணுமின் நிலையம் பற்றி ஏதாவது கூற முடியுமா?

“.. ஆமாம், ஒரு சிறிய அணுமின் நிலையம். இரண்டு கட்ட 110 மெகாவாட் மின் நிலையம். இலங்கைக்கு மாற்று எரிசக்தி தேவை என்பது எனது கருத்து. ஆனால் அதை முடிவு செய்வது இலங்கையின் உரிமையும் விருப்பமும் ஆகும்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here