follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1'எங்கள் நாட்டின் உறவினர்களுடன் உள்ள காஸா மக்களுக்கு தற்காலிக விசா' - கனடா

‘எங்கள் நாட்டின் உறவினர்களுடன் உள்ள காஸா மக்களுக்கு தற்காலிக விசா’ – கனடா

Published on

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

வடக்கு காஸாவைத் தொடர்ந்து தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காஸா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.

இதனால் பலஸ்தீன மக்கள் கடும் சோதனையை சந்தித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந்நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காஸா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 9ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காஸாவில் இருந்து அழைத்து வர அரசு கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும்.

இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது. ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காஸாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.

அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 240 பேர் பிணைக்கைதிகளை விடித்துச் சென்றுள்ளனர். இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 127 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...