அரச சேவையின் விடுமுறைகள் குறைக்கப்படும்

2731

அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியங்களுக்கான பணிப்பாளர் நாயகம், திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அந்த நோக்கத்திற்காக நிறுவனக் குறியீட்டின் விதிகளைத் திருத்துவதற்கு முன்மொழிந்துள்ளார்.

விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஓய்வூதியச் செலவு அரச செலவீனத்தில் 11.4% என சுட்டிக்காட்டியுள்ள ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம், செலவினங்களை நிர்வகிப்பதற்கு முழுப் பொதுத் துறையினரும் பங்களிக்க வேண்டுமென துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான 45 முன்மொழிவுகளை பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளதாக துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இங்கு, ஓய்வுபெற்ற சமூகத்தின் நலனுக்காக எதிர்பார்க்கப்படும் நிவாரணங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் முன்வைத்துள்ளார்.

பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் சங்கம் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் முன்வைத்த முன்மொழிவுகள் தொடர்பில் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் துறைசார் கண்காணிப்பு குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here