follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1JN-1 கொவிட் சோதனைகளுக்கு இன்னும் எந்த ஆயத்தமும் இல்லை?

JN-1 கொவிட் சோதனைகளுக்கு இன்னும் எந்த ஆயத்தமும் இல்லை?

Published on

புதிய JN-1 கொவிட் திரிபை சமாளிக்க சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை உட்பட 19 வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புதிய JN-1 கொவிட் வகை இலங்கைக்குள் பிரவேசித்துள்ள போதிலும், அது தொடர்பான மரபணு வரிசைமுறை பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

புதிய கொவிட் திரிபை கண்டறிய மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை இதுவரை வழங்கவில்லை என சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மருத்துவ விநியோகத் துறையில் பரிசோதனைகளுக்குத் தேவையான வினைத்திறன் கருவிகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதார நிபுணர்களின் கல்வியாளர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை பரிசோதிக்க, தற்போதுள்ள ரேபிட் ஆன்டிஜென் கருவிகள் காலாவதியாகும் முன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸின் சமீபத்திய துணை மாறுபாடு தொடர்பாக உலகின் பல நாடுகள் மீண்டும் நாடுகளின் சுகாதாரப் பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளன.

இதுவரை, இந்த JN-1 கொவிட் வகை இந்தியா, சீனா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...