follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1காஸாவில் போர்ச் சுடர்களுக்கு மத்தியில் நான்கு சிசுக்கள் பிரசவம்

காஸாவில் போர்ச் சுடர்களுக்கு மத்தியில் நான்கு சிசுக்கள் பிரசவம்

Published on

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலிய தாக்குதல்களால் இடம்பெயர்ந்த இமான் அல் மஸ்ரி (Iman al-Masry) என்ற பெண் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் காரணமாக 5 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று ஜபாலியா அகதிகள் முகாமுக்கு சென்றுள்ளதாகவும், அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

28 வயதான பெண், Tia, Lynn என இரு பெண் குழந்தைகளையும் Yasser, Mohammed என இரு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

இருப்பினும், போரினால் தாக்கப்பட்ட மற்றைய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் பிரசவத்திற்குப் பிறகு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிதாகப் பிறந்த Mohammed ஒரு கிலோகிராம் (2.2 இறாத்தல்) மட்டுமே எடையுள்ளதாகவும், அகதிகள் முகாமில் உள்ள மருத்துவமனையில் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது, Tia, Lynn மற்றும் Yasser ஆகியோருடன், Deir el-Balah இல் தங்குமிடமாக மாற்றப்பட்ட ஒரு குறுகிய பாடசாலை அறையில் அவர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 50 உறுப்பினர்களுடன் வாழ்கின்றனர்.

Displaced Palestinian mother in Gaza gives birth to quadruplets | Israel- Palestine conflict | Al JazeeraGaza family tries to protect newborn quadruplets amid destruction of war -  CBS News

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...