follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை

Published on

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோருகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மின்சார சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பில் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக...

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10,000 ரூபாய் நிவாரணம்

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தினால்...