நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றினால் நிராகரிப்பு

1275

பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதித்துறை அதிகாரங்களை கடுமையாகக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கிய இந்த சட்டமூலம் கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரதமரின் புதிய சட்டத்தால் இஸ்ரேலின் ஜனநாயகம் கடும் சவாலுக்கு உள்ளாகும், நீதித்துறை பலவீனமடையும் என்பதை வலியுறுத்தியே உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நெதன்யாகுவின் அரசாங்கம் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் மற்றும் காஸாவில் தற்போதைய போரால் ஆழ்ந்த அதிருப்தி அடைந்துள்ளது, இஸ்ரேலிய அரசியல் வரலாற்றில் ஒரு வலதுசாரி அரசாங்கம் இத்தகைய கதியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here