follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பில்லை - ஈரான்

தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பில்லை – ஈரான்

Published on

ஈரானின் கெர்மன் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு ஆதரவளித்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

அந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை 103 ஆகும். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211க்கும் அதிகமாகும்.

அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் புரட்சிப் படையின் ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவேந்தல் ஈரானின் தெற்கு நகரமான கெர்மனில் உள்ள அவரது கல்லறையில் நடைபெற்றது. ஷியா ஷேப் அல் ஜெனரல் பள்ளிக்கு அருகில் காசிம் சுலைமானியின் கல்லறை உள்ளது. கொண்டாட்டத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கூடியிருந்தனர். இது தீவிரவாத தாக்குதல் என ஈரான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த கட்சியும் பொறுப்பேற்கவில்லை.

“.. ஈரானை அழிக்க முயலும் ஈரானின் தீமைகள் மீண்டும் ஒருமுறை ஈரானைச் சிதைக்க முயன்றன. அப்பாவி ஈரானியர்களின் இரத்தம் சிந்தப்பட்டது. தாக்குதலின் பின்னணியில் உள்ள ஈரானின் எதிரிகள் எவரையும் மன்னிக்க மாட்டோம். தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும்..” என ஈரானின் உச்ச தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...