follow the truth

follow the truth

May, 12, 2025
Homeவிளையாட்டுபிளேட் ரன்னர் விடுதலை

பிளேட் ரன்னர் விடுதலை

Published on

தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாரா ஒலிம்பியன் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யபட்டுள்ளார்.

13 வருட சிறைத்தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் தனது வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, 2029 வரை ஊடகங்களில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது வீட்டில் ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார்.

தன்னை திருடன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறியிருந்தார்.

அவர் தனது காதலியை குளியலறையில் கதவு வழியாக சுட்டார், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பிஸ்டோரியஸ் 1 வயது ஆவதற்கு முன்பே கால்களை இழந்தார்.

பின்னர், செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி கடுமையாக உழைத்து விளையாட்டு வீரரானார்.

அவர் பிளேட் ரன்னர் என்ற புனைப்பெயரால் அறியப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...