உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை 4வது இடத்தில்

942

2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘ஃப்ளாஷ் பேக்’ பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி ‘ஃபோர்ப்ஸ்’ என்ற வணிக இதழ் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு மேல் ஜப்பான், அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

பல கடினமான வருடங்களுக்குப் பிறகு, இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இணையத்தளத்தில் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டில் 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here