பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைப்பு

631

பல சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளின் அன்றாடப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதன் காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியர்கள், தாதியர்களின் சேவைகள் மற்றும் மருந்து விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் இரவுப் பணியை முடித்துக் கொண்டு வெளியேறியதாகவும், எஞ்சிய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் நாம் வினவியபோது தெரிவித்தார்.

எனினும், அவசர சிகிச்சைச் சேவைகள் தொடரும் எனவும், அனைத்து வைத்தியர்களும் 24 மணிநேர சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அல்ல உயிரைக் காப்பாற்றுவதே கடமை எனத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர், ஆபத்தான நோயாளர்களை வீட்டில் வைத்திருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும் தெரிவித்தார்.

35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார சேவையின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here