நெருங்கிய உறவில் இருந்த சுமைதாவுக்கு பெட்ரோல் ஊற்றி தீ

3630

கொழும்பு – 13 ஆதுருப்பு வீதி, ஒலந்த பள்ளி அருகே பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று காலை சந்தேகநபர் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தை எதிர்கொண்ட பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் மற்றும் அந்த திருமணத்தில் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தீ வைத்த நபருடன் அவர் நெருங்கிய உறவை பேணி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியில் ஏற்றி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரிக்க குறித்த பெண் முச்சக்கரவண்டியில் இருந்து கீழே இறங்கி வீதியில் ஓடியதுடன், பிரதேசவாசிகள் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் ஆதுருப்பு வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பாத்திமா சுமைதா என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேகநபர் குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும், தீ வைக்க காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன், பணம் எதுவும் கோரப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீவைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

தற்போது அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரான முஹமட் நிஜாம் முஹமட் சப்நீஸ் குறித்து தகவல் தெரிந்தால், 071 747 89 12, 071 859 44 23, 011 232 33 56 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஆதுருப்புவீதி பொலிசாருக்கு அறியத்தருமாறும் பொலிசார் கேட்டுக் கொள்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here