follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்தடைகளை தாண்டி திருமணம் செய்யும் 3 அடி உயர பாடகர்

தடைகளை தாண்டி திருமணம் செய்யும் 3 அடி உயர பாடகர்

Published on

தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபுரோசிக். 20 வயதாகும் இவர் 3 அடி உயரம் கொண்டவர். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் பாடகராகவும் திகழ்கிறார்.

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் சல்மான்கான், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி என பிரபலங்களுடன் நட்பாக பழகி அவர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
தடைகளை எல்லாம் தகர்த்து எப்போதும் சிரித்த முகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் இவர் தற்போது தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி அமிரா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜூலை 7ம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

அவர் அமிராவுக்கு இதய வடிவிலான வைர மோதிரத்தை நிச்சயதார்த்தின் போது அணிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Abduroziq Official (@abdu_rozik)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு...