“வெற்றி பெறும் வரை போர் தொடரும்” – இஸ்ரேல்

259

இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது.

தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“.. எங்களை யாரும் தடுக்கமாட்டார்கள். வெற்றி பெறும் வரை போர் தொடரும். காசாவில் நடத்திய ராணுவ தாக்குதலில், பெரும்பாலான ஹமாஸ் படையினரை அகற்றிவிட்டோம். ஒரு சர்வதேச சட்டம் உள்ளது. அது ஒரு எளிய விஷயத்தைச் சொல்கிறது.

வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாது. எகிப்து- காசா எல்லையின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இது காசாவிற்கு ஒரு முக்கிய விநியோக பாதையாக உள்ளது. இந்தப் பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்தமாட்டோம்..” என தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here