தண்ணீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

327

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன் நீர்க் கட்டணத்தையும் குறைக்கக்கூடிய விலைச் சூத்திரம் தொடர்பில் விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக நீர் ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சரியான குடிநீரை வழங்குதல், ஆராய்ச்சியை முறைப்படுத்துதல் மற்றும் கழிவு நீர் போக்குவரத்தை முறைப்படுத்துதல் ஆகிய பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டன.

அங்கு கருத்து தெரிவித்த நீர்வழங்கல் அமைச்சர், அடுத்த மாதம் மின் கட்டணத்தை குறைக்க மின்சார அமைச்சர் பாடுபடுவார் என்றும், அதேநேரம் தண்ணீர் கட்டணத்தையும் குறைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

எரிசக்தி செலவைக் குறைப்பதன் மூலம் நீர் விநியோகச் செலவைக் குறைப்பதுடன் நீர்க் கட்டணத்தையும் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஜனவரியில் மின்சாரக் கட்டணம் 66% அதிகரித்த போது, ​​தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாகஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கை மீட்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
உலக அளவில் இந்தப் பிராந்தியத்தில் மீண்டுவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிலர் ஜனாதிபதி தேர்தலை கோருவதாகவும் சிலர் பொதுத் தேர்தலை கோருவதாகவும், ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலுக்கு ஏற்ற வகையில் இலங்கை தற்போது கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு எரிவாயு மற்றும் எரிபொருளைப் பெற வரிசையில் நிற்கும் யுகத்தின் பின்னர் இலங்கை மீண்டுவரும் பொருளாதாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here