follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1சுகாதார சேவையில் உள்ள 72 சுகாதார சங்கங்கள் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில்

சுகாதார சேவையில் உள்ள 72 சுகாதார சங்கங்கள் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில்

Published on

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கினால், வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்திற்கு அமெரிக்க தூதுவரின் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். X...

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரம்

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஆகஸ்ட் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச...

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...