follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP1அநுரவை விடவும் விஜேவீரவின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அதிகம் - முஜிபுர்

அநுரவை விடவும் விஜேவீரவின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அதிகம் – முஜிபுர்

Published on

அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும் ரோஹன விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“.. அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதனை ஒத்திவைக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்தும் திகதியை அறிவிப்பதும் தேர்தல் ஆணைக்குழுவே தவிர சிறிகொத தலைமையகம் அல்ல. கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி சார்பில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார். இன்று நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமசாச அமோக வெற்றியினை பெறுவார். நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஏனைய வேட்பாளர்கள் குறித்து எங்களுக்கு தெரியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று நாடு விழுந்துள்ள நிலையில் இருந்து மேலெல பொருளாதார ரீதியாக திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறிக் கொள்கிறோம்.

எமக்கு இம்முறை 50% இற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளால் வெற்றி பெறுவதாக கூறப்படுவது நகைப்புக்குரியது. ஏனெனில் மக்கள் நம்பும் வகையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மக்களுக்கு ஜோக் சொல்லிக்கொண்டு திரிகின்றனர்.

இன்று அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான விலைவாசிகள் உயர்ந்துள்ளன. முடி வெட்டுதல் முதல் தாடி வெட்டுதல் வரைக்கும் அனைத்தின் விலைகளும் உயர்ந்துள்ளன. நாட்டில் தேர்தல் நெருங்க நெருங்க நிவாரணங்களும் வழங்குவது சாதாரண ஒன்று. அந்த நிவாரணங்களை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனின் குறைந்தது 75 இலட்சம் வாக்குகளேனும் பேர வேண்டும். அப்போதுதான் அது 50% இற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக இருக்கும். அதனை எமது தலைவர் சஜித் பிரேமதாச பெறுவார் என்ற பாரிய நம்பிக்கை எமக்குண்டு.

எம்மிடம் 52 எம்பிக்கள் இருந்தனர். அதில் 4 பேர் அரசுடன் இணைந்தனர். இப்போது 48 எம்பிக்கள் உள்ளனர். அரசுடன் இணைவதில் இருந்து வருடக்கணக்கில் இந்த எம்பிக்களை பாதுகாத்தோம். எஞ்சியுள்ள 48 பேரையும் தக்கவைத்துக் கொள்வதில் பிரச்சினைகள் இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க ரணில் விக்கிரமசிங்கவுடன் எவரும் இணைய மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க தோல்வி பெற்ற ஒரு தலைவர். தோல்வியடைந்த பக்கம் யார்தான் செல்வார்கள்? ரணிலின் கப்பல் கிட்டத்தில் மூழ்கப்போகுது. அதில் யார்தான் ஏறுவார்கள்?

பொஹட்டு அரசியலில் அவர்களுக்கு தலைவர் ஒருவர் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் நிற்க முடியாது. பசில் ராஜபகஷ இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர். கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் கொண்டுவர முடியாது. நாமல் ராஜபக்ஷ இன்னும் வயதில் சிறியவர் அவரும் சரிப்பட்டு வராது. அதனால் தம்மிக பெரேராவை நியமிக்க கதைகள் பேசப்படுகிறது. ஆனால் தம்மிக்கவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். பின்னர் எல்லோரும் ரணில் விக்கிரமசிங்க அருகே தான் செல்வார்கள்.

ஜேவிபி கூட்டங்களில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்தது. அது ஒன்றும் புதிதல்ல. வரலாற்றில் ஜேவிபி மக்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவு இல்லை அதுதான் உண்மை. ஜேவிபி கூட்டத்திற்கு எல்லா கட்சிகளின் ஆதரவாளர்களும் செல்கிறார்கள். இம்முறை அவர்களது வாக்குகள் அதிகரிக்கும் என நாமும் கூறுகிறோம். ஏனெனில் பொஹட்டுவ மக்களில் சிலர் ஆதரவளிப்பார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

அநுர குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தினை விடவும் ரோஹன விஜேவீரவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும். ஜேவிபி வெற்றி பெறும், ஆனால் அரச தலைமைக்கு அல்ல..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

“ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் மன்னிக்கப் போவதில்லை”

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி...

பாலின சமத்துவச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது

பாலின சமத்துவச் சட்டமூலம் முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன...

ஆடுகளம் சரியில்லை.. துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை..

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை உள்ளிட்ட அணிகள் பெற்றுள்ள நிலைப்பாடுகள் நல்ல நிலையில் இல்லை...