follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேர்தல் காய்நகர்த்தல்கள் - டயானா கமகே 10 கோடிக்கு ஏலம்

தேர்தல் காய்நகர்த்தல்கள் – டயானா கமகே 10 கோடிக்கு ஏலம்

Published on

இந்த நாட்களில் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ள பலமான போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்ற வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள், தமக்கு ஆதரவாக மேடையில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வேட்பாளர் ஒருவர் தனது மேடையில் ஏறுவதற்கு டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் ஏலத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், இந்தக் கோரிக்கைகளை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...