உலகிலேயே தூய்மையான அரசியல்வாதிகளை கொண்ட நாட்டில் ஊழலில் சிக்கிய அமைச்சர்

904

ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, சிங்கப்பூர் அமைச்சரவை அமைச்சர் சுப்ரமணிய ஈஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஈஸ்வரன் (61 வயது), சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சராக 2021 முதல் இப்போது வரை பணியாற்றினார்.

ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை கடந்த ஜூலை 2023 இல் தொடங்கியது. பாராளுமன்ற பிரதிநிதியாக ஈஸ்வரன் மாதம் 15,000 சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார்.

சிங்கப்பூரில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஓங் பென் செங்கின் வணிக நலன்களுக்கு சேவை செய்யும் போது, ​​விமானங்களில் பயணம் செய்ததாகவும், சொகுசு ஹோட்டல்களில் தங்கியதாகவும், ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை பரிசாக பெற்றதாகவும் சுப்பிரமணியம் ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுப்ரமணிய ஈஸ்வரன் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் போது, ​​குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், ஜூலை 2023 முதல் தனது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை திருப்பித் தருவதாகக் கூறினார்.

கடந்த 1986ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவர் இவ்வாறு ஊழல் விசாரணையை எதிர்கொண்டார்.

உலகிலேயே தூய்மையான அரசியல்வாதிகளை கொண்ட நாடு சிங்கப்பூர் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் அமைச்சர்கள், உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பொதுப் பிரதிநிதிகளில் ஒருவராக உள்ளனர், அவர்கள் மாதத்திற்கு S$45,000 (சுமார் இலங்கை ரூபாய் 10,757,000) ஆரம்ப சம்பளம் பெறுகின்றனர்.

மோசடி மற்றும் ஊழலை தடுக்க சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here