ரணிலின் நிதியமைச்சை சாடும் மனுஷ

546

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் துறை தொடர்பாக எந்த புரிதலும் இல்லாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்படுவதால், மீனவர்களை கவனிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க அந்த அதிகாரிகள் தவறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “கgருசரு” வேலைத்திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறையில் பணியாற்றும் நிபுணர்களுடன் நேற்று(17) நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கடற்றொழில் துறை ஆற்றிவரும் பங்களிப்பை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“… நாட்டைச் சுற்றிக் கடலை வைத்து, வெளிநாட்டிலிருந்து டின் மீன்களைக் கொண்டு வருகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு ஒரு கிலோவுக்கு நூறு மற்றும் இருநூறு ரூபாய் வரி விதிக்கப்படுவதால் தண்ணீர் மற்றும் மின்சார சுமை குறைகிறது. அதையே நாட்டினுள் தொழிற்சாலை ஒன்றினை நிறுவினால் அதற்கு 18% வரியை அறவிடுகிறார்கள். அரசுதான் அதனையும் செய்கிறது. இதில் கை ஓங்கியவர்கள் நாங்கள் தான். ஆனால் இதை நிதி அமைச்சக அதிகாரிகள் தயாரித்து அனுப்பியுள்ளனர். மீனவர்களை எப்படிக் கவனிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை..”

உலகின் ஏனைய நாடுகளில் உள்ள ஒவ்வொரு தொழிலும் ஒன்றாக மதிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், எமது நாடு கட்சிகள், தேசங்கள், சாதிகள், தொழில்கள் என பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டினார்.

பல்வேறு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, மீனவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், தாழ்த்தப்பட்ட சலுகைகளை வழங்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.

“.. நாங்கள் தொழில் காப்புறுதி என்ற புதிய சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். அதன்மூலம், புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டு, இந்தத் துறைகளில் இருப்பவர்களுக்காக ஒரு குழு உருவாக்கப்படும். அதன் பின்னர் இந்த நாட்டில் அரசியலமைப்பு ஸ்தாபனமாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்”

“.. இங்கே மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு தொழிற்சங்கம் அல்ல. இது ஒரு தொழில்முறை கவுன்சில். இதில் முடிவெடுப்பது மீனவர்களே.. அமைச்சர் என்ற முறையில் நீங்கள் செய்யும் விதிமுறைகளை அரசிதழில் வெளியிட எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது”

மீனவ சமூகம் மீனவர் தொடர்பான தொழில் நிலை மற்றும் அது தொடர்பான உரிமம் வழங்கும் முறையை தயார் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகில் உள்ள ஏனைய மீனவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்தி இந்நாட்டு மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விபத்துக்களை பெருமளவில் குறைக்க முடியும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் தொழிலில் ஈடுபடும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனக்கு நல்ல புரிதல் உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here