“பாராளுமன்றத்தை எரிக்க போனவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்”

648

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை மக்கள் தாங்கிக் கொள்வது கடினம் என்பதை ஒப்புக்கொள்வதாக ஆளும் கட்சியின் அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

யுத்த மோதல்கள் காரணமாக உலகின் பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் வலியுறுத்துகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு வழமைக்கு திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, எதிர்க்கட்சிகள் மற்றும் சதிகாரர்களின் பொய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கிறார்.

கம்பஹா ஒருத்தோட்டை நடைபாதை மீள் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (21) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். நடைபாதையை பயன்படுத்தும் ஒரு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க இது அமைந்துள்ளது.

இந்த நடைபாதையானது 2011 ஆம் ஆண்டு பொருளாதார அமைச்சு மற்றும் கம்பஹா மாநகர சபையினால் உருவாக்கப்பட்டது.

தற்போது, ​​பாதையை சீரமைக்க வேண்டும் என, பயன்படுத்தும் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டின் பேரில் இங்கு மீள் அபிவிருத்தி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

கேள்வி- சிறிய மழை பெய்தாலும் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின்றன. இவற்றை அபிவிருத்தி செய்ய திட்டம் இல்லையா?

பதில்- எங்களுக்கு மட்டும் தனியாகச் செய்வது கடினம். மக்களும் அறிந்திருக்க வேண்டும். மக்கள் பல இடங்களில் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

கேள்வி- அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டம் என்ன?

பதில்- கொரோனா காரணமாக நாடு இரண்டு வருடங்கள் மூடப்பட்டது. பின்னர் போராட்டம் வந்தது. ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் நாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

கேள்வி- மக்களுக்கு நிவாரணம் தருகிறோம் என்று சொன்னாலும் ஒரு கரட் கூட சாப்பிட முடியாத நிலை உள்ளது?

பதில்- கரட்டின் விலை அதிகரித்தது வற் வரி காரணமாக அல்ல. பொதுவாக, காய்கறிகளின் விலை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கும்.

கேள்வி- இல்லை.. அமைச்சரே, இப்போது வாழ்க்கைச் செலவு அதிகம் தானே?

பதில்- இதை மக்களால் தாங்க முடியாது என்பது உண்மைதான். அதை ஏற்றுக்கொள்கிறேன். தற்போது, ​​உலகின் பல நாடுகளில் யுத்த மோதல்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை. அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமாரக்கு இது தெரியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும். நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவேதான் எதிர்க்கட்சிகள் மற்றும் சதிகாரர்களின் பொய்யான பேச்சுக்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி- ஜனாதிபதி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்கிறாரே?

பதில்- அவர் நாட்டுக்காக உதவிகளைப் பெறப் போகிறார். ஆனால் அனுரகுமார இந்த நாட்டை அராஜகமாக்கவே வெளிநாடு செல்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்கிறார்கள்.

கேள்வி – ஆனால் மக்கள் 225 பேரும் வேண்டாம் என்கிறார்களே?

பதில்- அப்படிச் சொல்பவர்கள் மூன்று சதவீதத்தினரே. அவர்களும் அந்த 225 பேரில் இருக்கிறார்கள். ஜே.வி.பி எப்போதும் நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை தாக்குகின்றார்கள். நாட்டை அராஜகமாக்க பார்க்கிறார்கள்.

கேள்வி – ஐக்கிய மக்கள் சக்தியின் வேகத்தைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறதா?

பதில்- சென்ற தடவை ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் 500,000 வாக்குகளைப் பெற்றார்கள். அது100% அதிகரித்தாலும் 10 இலட்சம் தான். ஆனால் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்தாலும் 55 இலட்சம் எடுத்தார்கள். புத்திசாலித்தனமான மக்கள் இந்த அரசியல் வாசிப்பைப் தேர்வுகளை புரிந்து கொள்வார்கள். ஜே.வி.பிக்கு இப்போது இருப்பது ஃபேஸ்புக் அலை ஒன்று மட்டும்தான்.

கேள்வி- தற்போதைய ஜனாதிபதிக்கு குறைந்தது 500,000 வாக்குகள் இல்லையே?

பதில்- அதனால் தான் நாங்கள் கூறுகிறோம் மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பெறுபவரே நாட்டின் வருங்கால ஜனாதிபதி என்று.

கேள்வி- ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கவில்லை என மொட்டுக் கட்சியினர் கூறுகின்றாரகளே?

பதில்- சரியான நேரத்தில் நாட்டை மீட்டெடுக்கும் நபரை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மனிதர்தான் நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முன்வந்தார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். இன்று வாய்ச் சவடால் விடுபவர்கள் அன்று யுத்தத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தினார்கள். அவர்களின் வரலாறு இப்பிடித்தான் இருந்தது.

கேள்வி – ஆனாலும் அமைச்சரே இந்த நேரத்தில் மொட்டுக் கட்சி இரண்டு மூன்றாக உடைந்திருக்கின்றதே? இனி எப்படி ஒரே கருத்துக்கு எடுக்க முடியுமா?

பதில் – ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்வதற்கு நூற்றுக்கு 51 சதவீதம் வாக்குகள் வேண்டும். இன்று நாட்டின் தேசியப் பிரச்சினை திருடர்களைப் பிடிப்பது அல்ல தானே. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் சவாலை வெற்றி கொள்வதற்கான தலைவர் தான் தற்போதைய ஜனாதிபதி. அதனால் தான் நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கின்றோம். மொட்டுக் கட்சி எந்த நேரத்திலும் வேலை செய்வது சிந்தித்துத்தான். ஆனாலும் அரகலய போராட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தை தீ வைக்க முயற்சி செய்த மனிதர்கள் இன்று ஜனநாயகம் அற்றிக் கதைக்கிறார்கள்.

கேள்வி- கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைக் கொண்டு வந்ததும் நாட்டைப் பற்றி சிந்தித்துதானா?

பதில்- கொரோனாவால், வளர்ச்சியடைந்த நாடுகளில் வீதிகளில் மக்கள் இறந்தனர். ஆனால் எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய இடமளிக்கவில்லை. அவர் நாட்டைத் திறந்து மூன்று தடுப்பூசிகளையும் கொடுத்தார். இன்று கூச்சல் போடுபவர்கள் அவரால் தான் உயிரோடு இருக்கிறார்கள்.

கேள்வி- இன்று கோரிக்கைகளை வென்றெடுக்க பேசும் அனைவரையும் அரசாங்கம் தாக்குகிறது.

பதில்- கோத்தாபாய அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தனி இடம் கொடுத்தார். இறுதியில் நடந்தது என்ன? அதைச் செய்யக்கூடிய நாடுகள் உள்ளன. மக்களைக் கொல்வதும், வீடுகளை எரிப்பதும் அல்ல ஜனநாயகம்.

கேள்வி – எதிர்காலத்தில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?

பதில்- முடியும்… ஆனால் அமைதியாக. இல்லை என்றால் எதற்கும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி- இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்க முடியுமா?

பதில்- கேட்கலாமா வேண்டாமா என்று முதலில் அவர் சொல்ல வேண்டும்.

கேள்வி – ஆனால் தற்போதைய ஜனாதிபதியே ஜனாதிபதித் தேர்தலைக் கோருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது?

பதில்- ஆனால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என்று கூறுகிறார்.

கேள்வி- இறுதியில் நினைக்காத ஒருவர் ஜனாதிபதியாக வருவாரா?

பதில்- முடியும். ஆனால் அந்த நபர் யாராக இருந்தாலும் அவருக்கு மொட்டுக்கட்சியின் ஆதரவு இருக்க வேண்டும். அதுதான் களத்தில் உள்ள உண்மை.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here