காஸா : கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் பலி

496

காஸா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலில் 1,300 பேரைக் கொன்று 240க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை எடுத்தபோது இஸ்ரேல் தனது தாக்குதலை ஒக்டோபர் 7 அன்று தொடங்கியது.

இந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் அமைப்பு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிரான “தேவையான நடவடிக்கை” என்றும், பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு வழியாகவும் இந்தத் தாக்குதலை ஹமாஸ் விவரித்துள்ளது.

இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகள் தற்போது தெற்கு காஸா பகுதியில் கவனம் செலுத்துகின்றன.

ஹமாஸ் உயர்மட்ட தளபதிகள் கான் யூனிஸ் நகரின் சுரங்கப் பாதைகளில் மறைந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகளில் 20 முதல் 30 சதவீதம் வரை இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here