மறுமணத்துடன் சொயிப் மலிக்கின் உலக சாதனை

973

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விவாகரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த மறுமணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகை சனா ஜாவேத் உடனான அவரது புதிய திருமணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களை கடந்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை சொயிப் மலிக் பெற்றார்.

இந்த வரம்பை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் 13,000 டி20 ஓட்டங்களை கடந்தார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BBP) Rangpur Riders இற்கு எதிரான Fortune Barishal இடையிலான போட்டியின் போது சொயிப் மலிக் இந்த மைல்கல்லை எட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here