கழிவறை பிரச்சினையால் சூடான திஸ்ஸ குட்டி ஆராச்சி

448

ஊவா பரணகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தலைமையில் ஊவா பரணகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு மலசலகூட வசதியின்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படும் போபுருஎல்ல பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பரணகம உள்ளூராட்சி சபையால் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதிக்க முடியாது என வெலிமடை தள வன அதிகாரி தெரிவித்தார்.

ஊவா பரணகம உள்ளூராட்சி சபையின் செயலாளர் தெரிவிக்கையில்; தான் இந்த இடத்தை பராமரித்து வருவதாகவும், இதுவே தனது பிரதான வருமானம் எனவும், சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு, கூட்டு திட்டமாக, உயரதிகாரிகளுக்கு தெரிவித்து அனுமதி வழங்கலாம் என, தள வன அலுவலர் தெரிவித்தார்.

இந்த நிர்மாணத்திற்கு பிரதேச சபை அனுமதிக்க வேண்டும் எனவும் ஊவா பரணகம பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

“.. நீர்வீழ்ச்சிக்கு வரும் மக்களின் பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரித்து வனப்பாதுகாவலர் பெருமளவில் பணம் சம்பாதிக்க முயல்வதாக சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்தார். இவர்களின் பேராசை, அதிலும் பணம் அடிக்கப் பார்க்கினனர்.. இவர்கள் பேராசை பிடித்தவர்கள். நாம்மக்கள் சேவகனாக இங்கு வந்துள்ளோம், நானும் எம்பி அவரும் எம்பி. ஒரே எண்ணிக்கையான வாக்குகளையே பெற்றோம். இவ்வாறு பேராசை பிடித்ததில் தான் அவனெல்லாம் மினிஸ்டர் ஆயிட்டிருக்காங்க. எப்படி மினிஸ்டர் ஆனாலும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.. அப்படி இல்லை என்றால் நான் விவசாய அமைச்சர் உடன் மோதவும் தயார். என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here