“ராஜபக்ஷ குடும்பம் 98 வருட அரசியல் – எனக்கு பிறகு வரும் பரம்பரையும் அரசியலில் துடிப்புடன் இறங்கும்”

651

இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அடுத்த பரம்பரையும் துடிப்புடன் எனக்கு பின் வரும் பரம்பரையும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“.. இன்று ஜனாதிபதி மகுடத்திற்காக பலதரப்பினர் முயற்சித்து வருகின்றனர். விவசாயிகள் முயற்சிக்கின்றனர், வியாபாரிகள் முயற்சிக்கின்றனர், ஊடக பிரதானிகள், முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகள் என பலதரப்பும் முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் யதார்த்த நிலையினை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதான கட்சிகள் இன்றி ஏனைய கட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மக்கள். அவர்கள் எங்கள் வீடுகளுக்கு தீ வைத்தவர்களாக இருக்கட்டும், இந்நாட்டை அழித்தவர்களாக இருக்கட்டும் அதற்கு மக்களுக்கான உரிமைகள் உண்டு.

ஆதனால் நாம் ஒருபோதும் குறிப்பிட்ட சிலருக்கு பயந்து அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியதில்லை. நாம் தீர்மானிக்க வேண்டியது, இந்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அன்றி அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்ல என்பதை நான் நம்புகிறேன். எனது அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறேன். முன்னிற்க வேண்டிய இடங்களில் முன்னிற்பேன்.

இப்போது எடுக்க வேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவைப்போம். உண்மையிலேயே நாடும் மக்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் நிறையவே உள்ளன. சிலர் மக்களை குறை கூறுகின்றனர், சிலர் 75 வருட அரசியலை குறை கூறுகின்றனர், இன்னும் சிலர் ராஜபக்ஷ குடும்பத்தினால் தான் 75 வருட சாபம் எனக் கூறுகின்றனர். எமது குடும்பம் 55 வருட 100 வருட அரசியலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் 75 வருடம் ஆட்சி செய்ததில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றும் போது 17 பில்லியன் பொருளாதாரத்தையே 2005ம் ஆண்டு பொறுப்பேற்றார். யுத்தத்துடன் கூடிய ஒரு பொருளாதாரத்தையே பொறுப்பேற்றார்.

பாண் ஒன்றினை ரூ.3.50 இற்கு வாங்க டொலர் மில்லியன் 800 கடனாக பெற்றது. அதனை டொலர் பில்லியன் 80 வரை நாம் கொண்டு வந்தோம். தனிநபர் வருமானத்தினை இரட்டிப்பாக்கினோம். இவ்வாறு மக்களுக்கு செய்தோம்.

கடந்த காலங்களில் எதிர்பாரா விதமாக கொவிட் தொற்றினால் நாம் பின்னடைந்தோம். கொவிட் தடுப்பூசி இட்ட வைத்தியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கும் ஞாபகம் இல்லை கொவிட் என நோய் இருந்ததா என்று.. இது எமது நாட்டின் விதமா உலக விதமா என்பது எனக்குத் தெரியாது. சவால்களுக்கு நாம் முகங்கோடுத்தோம். உரப் பிரச்சினை, லொக்டவுன் போன்ற பிரச்சினைகள் எழுந்தன. அப்போது கோட்டாபய ராஜபக்ஷ உண்மையிலேயே உயிர்களை காப்பாற்றினார். எமது குடும்பம் இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அடுத்த பரம்பரையும் துடிப்புடன் எனக்கு பின் வரும் பரம்பரையும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here