தனியார் துறையில் நடந்த முதல் இலஞ்ச சோதனையில் சிக்கிய பாலியல் இலஞ்சம்

1030

தனியார் துறையில் இலஞ்ச ஒழிப்புத்துறை முதல் சோதனையை நேற்று (26) நடத்தியது.​

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள 75% சர்வீஸ் அலவன்ஸை 100% ஆக உயர்த்தி, பணி நிரந்தரம் செய்யவும், எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலையை தொடர தேவையான சூழலை உருவாக்கவும், அந்த ஹோட்டல் ஊழியரிடம் இருவரும் பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளனர்.
அதன்படி, ஹபரணையில் உள்ள தனியார் விடுதிக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த இவர், இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் குறித்த விடுதியின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இலஞ்சம் அல்லது ஊழலைக் கையாள்வதற்காக மட்டுமே இருந்த அதிகாரங்களைத் தவிர்த்து, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் தனியார் துறையில் இலஞ்சம் வாங்குவதைக் கையாள்வதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here