பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்த களனி பல்கலை மாணவர்கள்

170

களனி பல்கலைக்கழகத்தின் ஏறக்குறைய 500 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திஸ்ஸபுர சிறிசுமேத தேரரிடம் டெய்லி சிலோன் வினவிய போது;

பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (31) வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று (29) இரவு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியதாகவும், போராட்டத்தினை கலைக்க நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸ் தரப்பு வீசியதாகவும் தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் தங்கி இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த திஸ்ஸபுர சிறிசுமேத தேரர், அந்த கட்டிடத்தில் இன்னும் மாணவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளைய தினம் வரவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தின் பீடம் ஒன்று மூடப்பட்டுள்ளதாகவிம், இதன் காரணமாக இன்று (30) காலை 8.30 மணிக்கு நடைபெற இருந்த அந்த ஆசிரியப் பரீட்சையை அருகில் உள்ள வித்தியாலயங்கரை பிரிவேருவனத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இன்று காலை 8:00 மணியளவில் பரீட்சை நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களை சோதனை செய்யும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிர்வாக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here