follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ஷேக் ஹசீனாவுக்கு சீனா அழைப்பு

ஷேக் ஹசீனாவுக்கு சீனா அழைப்பு

Published on

சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்,” என்று வங்காளதேச வெளியுறவு துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

பிரதமரின் பீஜிங் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...